சாம்சங் கேலக்ஸி எப் 14 ஸ்மார்ட்போன்

சாம்சங் தயாரிப்புகளில் கேலக்ஸி ரக ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலமானவை. இப்போது எப் 14 மாடலை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எப் 14 ஸ்மார்ட்போன்
Published on

இது 6.6 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரை, 5-ஜி அலைக்கற்றை செயல்பாடுகளைக் கொண்டது. இது 13 பேண்ட் அலைவரிசையில் செயல்படும். இதனால் 5-ஜி இணைப்பில் அதி வேகமாகச் செயல்படும். இதன் விலை சுமார் ரூ.12,990.

இதில் 1330 எக்ஸினோஸ் 5 என்.எம். பிராசஸர் உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 6 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் உள்ள பேட்டரி உள்ளது. இது விரைவாக சார்ஜ் ஆக 25 வாட் சார்ஜரும் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளது. கருப்பு, பர்ப்பிள், பச்சை நிறங்களில் கிடைக்கும். 4 ஜி.பி. ரேம் மற்றும் 6 ஜி.பி. ரேம்களைக் கொண்டதாகவும், 128 ஜி.பி. நினைவகம் உடையதாகவும் வந்துள்ளது. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் உடைய மாடலின் விலை சுமார் ரூ.14,490.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com