மணல் கடத்தியவர் கைது

மயிலாடுதுறையில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
மணல் கடத்தியவர் கைது
Published on

மயிலாடுதுறை

மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் மற்றும் போலீசார் மாப்படுகை அண்ணா சிலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனையிட்டபோது அதில், மாப்படுகை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மணல் கடத்திய சோழம்பேட்டை அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த குமரேசன் மகன் செல்வக்குமார்(வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com