சந்தியாவுக்கு 36 வயது!

செல்லமடி நீ எனக்கு, அத்திப்பூக்கள், வம்சம், சந்திரலேகா ஆகிய சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமாக இருப்பவர், சந்தியா.
சந்தியாவுக்கு 36 வயது!
Published on

செல்லமடி நீ எனக்கு, அத்திப்பூக்கள், வம்சம், சந்திரலேகா ஆகிய சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமாக இருப்பவர், சந்தியா. இவரை குடும்பத்தினர் செல்லமாக, சண்டி என்று அழைக்கிறார்கள்.

சந்தியா என்ற சண்டிக்கு 36 வயது ஆகிறதாம். இவருடைய சொந்த மாநிலம், தெலுங்கானா. தாய்மொழி, தெலுங்கு. திருமணம் ஆகிவிட்டது. இவரது குடும்பம் சென்னையில் வசித்து வருகிறது.

சந்தியாவுக்கு பிடித்த நடிகர், சிரஞ்சீவி. பிடித்த நடிகை, குஷ்பு. பிடித்த உணவு, சிக்கன்.

இவரை பற்றி இவரே சொல்லும்போது, எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். எனக்கு நடிப்புடன் நடனம் ஆடவும் பிடிக்கும். சமூகவலைத்தளங்களில் என்னை பற்றிய தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறேன் என்கிறார், சந்தியா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com