நண்பர் மீது மோசடி புகார் கொடுத்த சஞ்சனா கல்ராணி

போதை பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் சஞ்சனா கல்ராணி, நண்பர் மீது மோசடி புகார் கூறியிருக்கிறார்.
நண்பர் மீது மோசடி புகார் கொடுத்த சஞ்சனா கல்ராணி
Published on

கடந்த ஆண்டு போதை பொருள் விற்பனை மற்றும் போதை பொருள் பயன்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. தற்போது அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் விடுதலையாகி படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு கால் டாக்சி டிரைவர் சஞ்சனா மீது போலீசில் புகார் அளித்தார். கார் பயணத்தில் தன்னை ஆபாசமாக திட்டியதாக அவர் புகாரில் கூறியிருந்தார். இந்நிலையில், தனது நண்பர் ராகுல் டான்சி என்பவர் மீது நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவா மற்றும் கொழும்பில் இருக்கும் முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுவதாக என் நண்பர் ராகுல் டான்சி கூறியிருந்தார். அவரது பேச்சை நம்பி, கடந்த 3 ஆண்டுகளாக பணத்தை முதலீடு செய்தேன்.

ராகுல் டான்சி உள்பட 3 பேரின் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பினேன். ஆனால், முதலீட்டுக்கான எந்தவித வட்டியையும் கொடுக்கவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டால் மிரட்டுகின்றனர். ராகுல் டான்சி உள்ளிட்டோர் என் பணத்தை சட்டவிரோத செயல்களில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கின்றனர். என் கவுரவத்தை பாதிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com