கௌதம் கார்த்திக்குடன் இணையும் சரத்குமார்.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் இணைந்துள்ளார்.
கௌதம் கார்த்திக்குடன் இணையும் சரத்குமார்.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
Published on

அறிமுக இயக்குனர் தட்சிணா மூர்த்தி ராமர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜனனி, ரவீனா ரவி மற்றும் தீப்ஷிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இதில் நடிகர் சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம் சிஎஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன், திரிபுரா கிரியேஷன்ஸ் முரளிகிருஷ்ணா வங்கயாளபதி மற்றும் டாரஸ் சினிகார்ப் சார்பில் வெங்கட ஸ்ரீனிவாஸ் பொக்கரம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

படத்தின் இயக்குனர், தட்சிணா மூர்த்தி ராமர் கூறும்போது, கௌதம் கார்த்திக், சரத்குமார் சார் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகர்களுடன் பணியாற்றுவது எனது கனவு நனவான தருணம். அவர்களின் பேரார்வமும் அர்ப்பணிப்புமிக்க திறமையும் கலந்த நடிப்பில், சினிமா அரங்குகள் கூஸ்பம்ப்ஸ் தருணங்களால் நிரம்பி வழியும் என்று நான் நம்புகிறேன். திரையுலகில் சரத் சாரை ரசித்து வளர்ந்த நான், அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை. நான் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை எழுதும்போது கூட, சரத் சாரை மனதில் வைத்திருந்தேன், ஆனால் அவர் என் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்று உறுதியாக தெரியவில்லை, கதையை விவரித்தவுடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஆச்சர்யம் தந்தார் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com