பொங்கல் தினத்தில் களமிறங்கும் சசிகுமார்

பொங்கல் தினத்தில் வெளியாக இருந்த அஜித்தின் வலிமை திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், சசிகுமார் நடித்த படம் அன்றைய தினத்தில் வெளியாக இருக்கிறது.
பொங்கல் தினத்தில் களமிறங்கும் சசிகுமார்
Published on

எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் படம் கொம்புவச்ச சிங்கம்டா. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் ஃபெராடி, சுந்தரபாண்டியன் துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, டான் பாஸ்கோ படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com