அதிரடி கதையில் சத்யராஜ்

அதிரடி கதையில் சத்யராஜ்
Published on

சத்யராஜ் கதை நாயகனாக நடிக்கும் புதிய படம் `வெப்பன்'. இதில் ராஜிவ் பிள்ளை, ராஜிவ் மேனன், வசந்த் ரவி, கனிகா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை குகன் சென்னியப்பன் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே `வெள்ளை ரோஜா' என்ற வெப் தொடரை இயக்கி பிரபலமானவர்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வரும் சத்யராஜ், இதில் இன்னொரு வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக உருவாகிறது. கதைக்களம் புதுமையாக இருக்கும். கேரளாவில் வயநாடு காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

யானையுடன் ஒரு பாடல் காட்சியில் சத்யராஜ் நடித்துள்ளார். இதற்காக சில நாட்கள் யானைகளுடன் பழகி பயிற்சி எடுத்து நடித்து இருக்கிறார். கனிகா முதல் முதலாக கேங்ஸ்டராக நடித்துள்ளார். அவரது நடிப்பு பேசப்படும்'' என்றார். இசை: ஜிப்ரான், ஒளிப்பதிவு: பிரபு ராகவ். மில்லினியம் ஸ்டூடியோ எம்.எஸ்.மன்சூர் தயாரித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com