சாயிஷா கொடுத்த மது விருந்து!

‘வனமகன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், சாயிஷா. இவருடைய சொந்த ஊர், மும்பை. அதனால், ஜாலியாக-சரளமாக பேசி பழகும் சுபாவம் கொண்டவர்.
சாயிஷா கொடுத்த மது விருந்து!
Published on

தமிழ் பட உலகுக்கு வருவதற்கு முன்பு ஒரு இந்தி படத்திலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து இருந்தார். வனமகன் படத்தை அடுத்து, கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்தார்.

சமீபத்தில் இவருடைய பிறந்த நாள் கொண்டாட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. கலந்து கொண்ட அனைவருக்கும் சாயிஷா மது விருந்து கொடுத்தார். திருமணம் ஆகாத ஒரு நடிகை மது விருந்து கொடுத்தது, இதுவே முதல் முறை என்று அதில் கலந்து கொண்ட ஒரு மூத்த நடிகர் கூறினார். மும்பையில் இதெல்லாம் சகஜமப்பா என்றார், இன்னொரு நடிகர்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com