

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், வனத்துறையினரும் இணைந்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 110 கிலோ பதப்படுத்திய கடல் அட்டைகள் மற்றும் 30 கிலோ பதப்படுத்திய கடல் குதிரைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த கடல் அட்டை மற்றும் கடல் குதிரைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த கடல் அட்டை மற்றும் கடல் குதிரைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.