வாலாஜாபாத்தில் பஸ் மோதி காவலாளி சாவு

காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதி திருமேற்றளிஸ்வரர் தெருவை சேர்ந்தவர் பரிதிவளவன் (வயது 40). ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
வாலாஜாபாத்தில் பஸ் மோதி காவலாளி சாவு
Published on

வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் நிலையில் வாலாஜாபாத் சேர்க்காடு பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு செல்ல சாலையை கடந்தார். அப்போது தாம்பரத்தில் இருந்து வாலாஜாபாத் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க முயன்ற பரிதிவளவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பரிதிவளவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரிதிவளவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com