மொபட்டில் கடத்தப்பட்ட 40 மது பாட்டில்கள் பறிமுதல்

மொபட்டில் கடத்தப்பட்ட 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொபட்டில் கடத்தப்பட்ட 40 மது பாட்டில்கள் பறிமுதல்
Published on

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார், கோடாலி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கழுவந்தொண்டி புதுத்தெருவை சேர்ந்த ராமு(வயது 43) மொபட்டில் வந்துள்ளார். அவரை, போலீசார் தடுத்து நிறுத்தியபோது அவர் பையில் மறைத்து வைத்திருந்த 40 மதுபாட்டில்களை தூக்கி வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டார். இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், ராமு மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com