மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட 70 மதுபாட்டில்கள் பறிமுதல்

மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட 70 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட 70 மதுபாட்டில்கள் பறிமுதல்
Published on

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை மற்றும் போலீசார் அம்பலவர் கட்டளை பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மறித்து சோதனை செய்ய முயன்றனர். ஆனால் அந்த நபர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது, அதில் ஒரு பையில் 70 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளுடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com