2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

களியக்காவிளை,

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மங்காடு ஆற்றுப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், அந்த வாகனத்தை டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் தங்களது வாகனத்தில் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். செம்மான்விளை குழிவிளை பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த டெம்போ சாலையோர தடுப்புச்சுவரில் மோதி நின்றது. உடனே, டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் சிறு சிறு மூடைகளில் மொத்தம் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து அதிகாரிகள், டெம்போவுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர், டெம்போவை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும், ரேஷன் அரிசியை காப்புக்காடு குடோனிலும் ஒப்படைத்தனர். அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com