மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

தேவதானப்பட்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
Published on

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45). இவர், அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் இருந்து வீட்டு உபயோகத்திற்காக டிராக்டரில் மணல் அள்ளி சென்றார். டிராக்டரை அதே ஊரை சேர்ந்த பிரபாகரன் (30) என்பவர் ஓட்டினார்.

அப்போது பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் டிராக்டரை நிறுத்தி விசாரணை செய்தார். விசாரணையில் அவர்கள், அனுமதியின்றி மணல் அள்ளி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணன், பிரபாகரனை கைது செய்தனர். மேலும் மணல் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com