கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்
Published on

ஆண்டிமடம்:

ஆண்டிமடத்தில் கிராவல் மண் கடத்தப்படுவதாக மண்டல துணை தாசில்தார் செல்வத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆண்டிமடம் வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், குவாகம் வருவாய் ஆய்வாளர் சந்திரன், ஆண்டிமடம் கிராம நிர்வாக அலுவலர் குருநாதன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்தபோது, அதில் சுமார் 7 யூனிட் கிராவல் மண் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும் டிப்பர் லாரியின் டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டு, அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததன் காரணமாக அவரிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் அங்கு வந்து லாரியை பறிமுதல் செய்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com