மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு

மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு நடந்தது.
மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு
Published on

திருச்சி:

தேர்வு

திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு-II மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு ஆகிய தேர்வுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த தேர்வு திருச்சி மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்விற்காக 4 தேர்வுக்கூட மேற்பார்வையாளர்கள், துணை கலெக்டர் நிலையில் ஒரு அலுவலர், துணை தாசில்தார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையத்தை தாசில்தார் நிலையில் நியமிக்கப்பட்ட 4 ஆய்வு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். தேர்வு மையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு அறைகளில் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அனுமதி மறுப்பு

இதில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் கடைசி நேரத்தில் வந்த சில மாணவர்களை போலீசார் தேர்வு எழுத அனுமதித்தனர். பின்னர் தாமதமாக வந்த மாணவர்களுக்கு தேர்வு மைய அலுவலர்கள் அனுமதி மறுத்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com