தடய அறிவியல் ஆய்வகத்துக்கு விஞ்ஞானிகள் தேர்வு

கிருமாம்பாக்கம் தடய அறிவியல் ஆய்வகத்துக்கு விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தடய அறிவியல் ஆய்வகத்துக்கு விஞ்ஞானிகள் தேர்வு
Published on

புதுச்சேரி

புதுவை கிருமாம்பாக்கத்தில் தடய அறிவியல் ஆய்வகம் உள்ளது. இந்த ஆய்வகத்தில் காலியாக உள்ள விஞ்ஞானிகள் காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

3 விஞ்ஞானிகள் பணியிடங்களுக்கு 40 வயதுக்கு உட்பட்ட எம்.எஸ்.சி. (வேதியியல், உயிரி வேததியில், தடயவியல் அறிவியல், மைக்ரோ பயலஜி) முடித்த முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓய்வுபெற்றவர்களாக இருந்தால் வயது வரம்பு 63 வயதுக்குள் இருக்கவேண்டும். இதற்கான விண்ணப்பங்களை கிருமாம்பாக்கம் காவல்நிலைய வளாகத்தில் உள்ள தடய அறிவியல் ஆய்வக இயக்குனருக்கு வருகிற நவம்பர் 6-ந்தேதிக்குள் அனுப்பவேண்டும்.

மேற்கண்ட தகவலை புதுவை உள்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com