தானேயில் லிப்ட் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

தானேயில் லிப்ட் விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
தானேயில் லிப்ட் விபத்தில் முதியவர் உயிரிழப்பு
Published on

தானே,

தானே நகரில் உள்ள சந்தன்வாடி பகுதியில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் 3-வது மாடியில் வசித்து வந்த முதியவர் நாராயண் தோண்டு(வயது60). இவர் இன்று மாலை தான் வசித்து வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள லிப்டுக்கும் அதன் சுவற்றுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் தவறுதலாக சிக்கிக்கொண்டார். அவர் வெளியேற முயற்சி செய்வதற்குள் லிப்ட் நகர்ந்ததால் அவர் அதற்கிடையே நசுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

அவர் எப்படி லிப்டுக்கு இடையே சிக்கினார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com