நடிகர் திகந்தின் முதுகு பகுதியில் பலத்த காயம் பெங்களூரு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

கோவா கடற்கரையில் பல்டி அடித்த போது நடிகர் திகந்தின் முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் பெங்களூரு மணிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் திகந்தின் முதுகு பகுதியில் பலத்த காயம் பெங்களூரு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
Published on

பெங்களூரு:

நடிகர் திகந்த்

கன்னட திரையுலகில் இளம் நடிகராக இருந்து வருபவர் திகந்த்(வயது 37). இவரது மனைவி அன்ட்ரிதா ராய். இவரும் நடிகை ஆவார். இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திகந்த், ஐந்திரிதா ராய் தங்களது நண்பர்களுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். 'சம்மர்ஷாட்' எனப்படும் 'பல்டி' சாகசம் செய்வதில் திகந்த்திற்கு ஆர்வம் அதிகம். அவர் கோவாவில் உள்ள கடற்கரை

மணலில் 'பல்டி' சாகசம் செய்து மகிழ்ந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கடற்கரை மணலில் பல்டி அடித்தபோது திகந்த் எதிர்பாராதவிதமாக தலைக்குப்புற விழுந்தார். இதில் திகந்தின் முதுகு, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அலறி துடித்துள்ளார். இதையடுத்து திகந்தை, அன்ட்ரிதா ராய் மற்றும் அவரது நண்பர்கள் மீட்டு கோவாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விமான ஆம்புலன்ஸ் மூலம்....

இந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக கோவாவில் இருந்து பெங்களூருவுக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் நேற்று திகந்த் அழைத்து வரப்பட்டார். பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்த விமான ஆம்புலன்சில் இருந்து திகந்த் ஆம்புலன்ஸ் மூலம் பழைய மெட்ராஸ் சாலையில் உள்ள மணிப்பால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் எலும்பு முறிந்து உள்ளதா? என்று ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்தனர்.

பின்னர் திகந்திற்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இந்த நிலையில் திகந்தின் முதுகுதண்டு முறிந்து விட்டதாகவும், மூளைக்கு செல்லும் நரம்பு அறுந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை திகந்திற்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் மறுத்து உள்ளனர்.

நலமாக இருக்கிறார்

இதுகுறித்து ஒரு டாக்டர் கூறும்போது, 'நடிகர் திகந்த் தற்போது நலமாக உள்ளார். அவர் அனைவரிடமும் பேசுகிறார். அவருக்கு முதுகுதண்டு முறியவில்லை. முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உள்ளோம்.அவருக்கு எந்த அபாயமும் இல்லை' என்று கூறினார். நடிகர் திகந்திற்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com