தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி

சரத் பவாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி
Published on

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 85). இவர் மராட்டிய முதல்-மந்திரியாகவும், எம்.பி.யாகவும் செயல்பட்டுள்ளார். சரத் பவார் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், புனே மாவட்டம் பாராமதியில் உள்ள வீட்டில் இருந்த சரத் பவாருக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சரத் பவாருக்கு நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை உடனடியாக புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். மருத்துவமனையில் சரத் பவாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சரத் பவார் இன்று மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com