அவதூறுகளால் ஷெரின் வருத்தம்

வலைதள அவதூறுகளால் ஷெரின் வருத்தம் அடைந்துள்ளார்.
அவதூறுகளால் ஷெரின் வருத்தம்
Published on

தமிழில் தனுஷ் ஜோடியாக துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான ஷெரின் தொடர்ந்து விசில், ஸ்டூடன்ட் நம்பர் 1, கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பூவா தலையா, நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.

இந்த நிலையில் ஷெரின் அளித்துள்ள பேட்டியில், "நான் வலைதளத்தில் அவதூறுகளை எதிர்கொண்டேன். நிறைய வெறுப்பாளர்கள் உருவானார்கள். என் பெற்றோரை விமர்சித்தனர். எனது நாயை கூட விட்டு வைக்காமல் சீண்டி பார்த்தனர். என்னை பற்றிய விமர்சனங்களை கடந்து போகலாம்.

ஆனால் எனது பெற்றோருக்கு பிரச்சினை வரும்போது எப்படி பொறுத்து போக முடியும். இதனால் மனம் உடைந்து அழுதேன். என்னை இழிவுபடுத்தி பேசலாம். ஆனால் எனது தாயை எப்படி பேசலாம். தவறானவர்கள்தான் மற்றவர்களை பற்றி தவறாக பேசுவார்கள். சமூக வலைதளங்களால் நன்மை இருக்கிறது. அதே நேரம் மிரட்டல்களையும் எதிர்கொள்ள வேண்டி இருப்பது அதன் தீமையாகும்'' என்றார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com