

47 வருடங்களுக்குப்பின், வசந்த மாளிகை படம் புதிய தொழில்நுட்பத்துடன் மெருகேற்றப்பட்டு, கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும், வசந்த மாளிகை படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி, சாதனை புரிந்தது. ரசிகர்கள் மத்தியில் சிவாஜிகணேசன் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று வினியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் புகழாரம் சூட்டினார்கள்!