நடிகர் புனித் ராஜ்குமார் பிறந்த நாள் உத்வேக தினமாக அனுசரிக்க முடிவு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

நடிகர் புனித் ராஜ்குமார் பிறந்தநாளை உத்வேக தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
நடிகர் புனித் ராஜ்குமார் பிறந்த நாள் உத்வேக தினமாக அனுசரிக்க முடிவு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
Published on

பெங்களூரு:

நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது சினிமா தயாரிப்பு நிறுவனமான பி.ஆர்.கே. ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் புனித் ராஜ்குமாரின் புகைப்படங்கள் தொகுப்பு நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. புனித் ராஜ்குமாரின் சிலை மற்றும் அந்த புகைப்பட தொகுப்பு வெளியிடும் நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, அந்த புகைப்பட தொகுப்பை வெளியிட்டு பேசியதாவது:-

நடிகர் புனித் ராஜ்குமாரின் சிலையை திறந்து வைத்துள்ளேன். அவர் மிக எளிமையான மனிதராக இருந்தார். அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் இருந்தனர். அவர் இறந்தபோது, ஒவ்வொருவரின் குடும்பத்திலும் துக்கம் சூழ்ந்து கொண்டது. இன்று ஒவ்வொருவரின் வீட்டிலும் புனித் ராஜ்குமாரின் புகைப்படம் உள்ளது. அவரை போன்ற மற்றொரு மனிதரை பார்ப்பது கடினம். அவர் பிறந்த மார்ச் 17-ந் தேதி உத்வேக தினமாக அனுசரிக்கப்படும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com