காயல்பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 5டன் விரலி மஞ்சள் பறிமுதல்

காயல்பட்டினம் அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 5 டன் விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.
காயல்பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 5டன் விரலி மஞ்சள் பறிமுதல்
Published on

திருச்செந்தூர்:

காயல்பட்டினம் அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 5 டன் விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.

விரலி மஞ்சள்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே ஓடக்கரை கடல் வழியாக விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் தலைமையில் போலீசார் மாடசாமி, இசக்கி, மாரியப்பன், முனீஸ்வரன் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஓடக்கரை கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

5 டன் பறிமுதல்

அப்போது ஒரு லாரியில் இருந்து சாக்கு மூட்டையை சிலர் படகில் ஏற்று முயன்றனர். போலீசாரை பார்த்ததும் படகில் இருந்தவர்கள் கடல் வழியாக படகு மூலம் தப்பி சென்றுவிட்டனர். லாரியில் 35 கிலோ எடையில் இருந்த 140 மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர். இதில் மொத்தம் 5 டன் விரலி மஞ்சள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் விரலி மஞ்சள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக உடன்குடி சுல்தான் நகர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பாலமுருகன் (வயது 23) என்பவரை பாலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விரலி மஞ்சள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com