அக்காள், தம்பிக்கு கத்திக்குத்து

புதுவை லாஸ்பேட்டை பகுதியில் விவாகரத்து தொடர்பான விவகாரத்தில் அக்காள், தம்பியை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அக்காள், தம்பிக்கு கத்திக்குத்து
Published on

புதுச்சேரி

மரக்காணம் பள்ளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுசு (வயது36). ஓட்டல் ஊழியர். அவரது மனைவி கவுரி (32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்டு கவுரி புதுவை லாஸ்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு குழந்தைகளுடன் வந்தார். மேலும் விவகாரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.

சம்பவத்தன்று கவுரி வீட்டிற்கு வந்த தனுசு தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து கவுரியை குத்தினார். தடுக்க முயன்ற அவரது தம்பி முத்துக்குமாரையும் குத்தி விட்டு தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com