அக்காள், தம்பியை தாக்கி கொலை மிரட்டல்

புதுச்சேரியில்அக்காள், தம்பியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அக்காள், தம்பியை தாக்கி கொலை மிரட்டல்
Published on

புதுச்சேரி

புதுச்சேரி கோவிந்தசாலையை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 25). நேற்று மாலையில் அங்குள்ள அந்தோணியார் கோவில் அருகில் அதே பகுதியை சேர்ந்த முகேஷ், பிரவீன், மாதவன் ஆகிய 3 பேரும் சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த ஹரிகரனை, அவர்கள் 3 பேரும், 'உனக்கு என்னடா இங்கு வேலை' என்று கூறி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சத்தம் கேட்டு, அவரது சகோதரி மோனிகா, மைத்துனர் அய்யப்பன் ஆகியோர் அங்கு ஓடி வந்து தடுத்தனர். அவர்களை முகேஷ் உள்பட 3 பேரும் சேர்ந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மோனிகா, அய்யப்பன் ஆகியோர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

புகாரின்பேரில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து முகேஷ், பிரவீன், மாதவன் ஆகிய 3 பேரை கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com