சிவா எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் ஆலோசனை

வில்லியனூர் தொகுதி மின்துறை வளர்ச்சிப் பணி குறித்து சிவா எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சிவா எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் ஆலோசனை
Published on

புதுச்சேரி

வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட 7 வார்டுகளில் உள்ள மின்துறை பிரச்சினைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார். இதில் மின்துறை தலைமை பொறியாளர்கள் சண்முகம், முரளிதரன், செயற்பொறியாளர்கள் கலிவரதன் (வடக்கு), ராமநாதன் (தெற்கு), உதவிப் பொறியாளர்கள் முருகேசன், கில்பர்ட் ஜேம்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில், வில்லியனூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள மின் பற்றாக்குறையை போக்குவதற்கு உரிய இடங்களில் மின்மாற்றிகள் அமைக்க வேண்டும். தாழ்வாக செல்லும் பல மின்கம்பிகளை உயர்த்திக் கட்டுவதோடு, போதிய மின்கம்பங்கள் அமைத்து மின்விளக்குள் பொருத்த வேண்டும். பழைய மின்மாற்றிகளின் திறனை உயர்த்த வேண்டும். வருங்காலத்தில் அதிக மின்திறன் கொண்ட எல்.இ.டி. விளக்குகளை தெருவிளக்காக பயன்படுத்துகின்ற நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்த பணிகளை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com