'வேஸ்டு' பொருட்களில் இருந்து 'ஸ்மார்ட் பர்ஸ்'

அழகான ஸ்மார்ட் பர்ஸ் தயாரிப்பு குறித்து இங்கே பார்க்கலாம்
'வேஸ்டு' பொருட்களில் இருந்து 'ஸ்மார்ட் பர்ஸ்'
Published on

'வேஸ்டு' பொருட்களில் இருந்து 'ஸ்மார்ட் பர்ஸ்'

தேவையான பொருட்கள்:

பிளாஸ்டிக் ஜார் மூடி | காலியான கிரீம் டியூப் | கிளிட்டர் தாள்

சார்ட் தாள் | கத்தரிக்கோல் மற்றும் கட்டர் | பசை

வெல்குரோ | அலங்கார லேஸ் | அலங்கார கற்கள்

செய்முறை:

1. படத்தில் காட்டியுள்ளவாறு பிளாஸ்டிக் ஜார் மூடியை வெட்டிக்கொள்ளவும்.

2. பின்பு, காலியான கிரீம் டியூப்பை படத்தில் கொடுக்கப்பட்டிருப்பதுபோல வெட்டிக்கொள்ளவும்.

3. இப்போது கிரீம் டியூப்பை, பிளாஸ்டிக் ஜார் மூடியின் அகலமான பகுதியை முழுவதும் மூடும்படி வைத்து பசை கொண்டு ஒட்டவும். பின்பு அதில் தேவையற்ற பகுதிகளை தனியாக வெட்டி எடுக்கவும்.

4. இப்போது சார்ட் தாளை படத்தில் காட்டியிருப்பதுபோல வெட்டி, பிளாஸ்டிக் ஜார் மூடியின் மீது ஒட்டவும்.

5. சார்ட் தாளின் அளவுக்கு ஏற்றவாறு கிளிட்டர் தாளை வெட்டி, அதன் மீது முழுவதும் மூடியவாறு ஒட்டவும்.

6. இப்போது பர்ஸ் தயாராகிவிட்டது. அதனை அலங்கார லேஸ் மற்றும் கற்கள் கொண்டு அலங்கரிக்கவும்.

7. அதன் பின்பு பர்ஸை திறந்து மூடுவதற்கு வசதியாக வெல்குரோவை ஒட்டவும்.

8. இந்த ஸ்மார்ட் பர்ஸை பணம் வைத்துக்கொள்வதற்கு பயன்படுத்தலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com