பல நண்பர்கள் ஒரு குடும்பம் போல நடித்துள்ளனர் - நடிகர் துல்கர் சல்மான்

பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பல நண்பர்கள் ஒரு குடும்பம் போல நடித்துள்ளனர் - நடிகர் துல்கர் சல்மான்
Published on

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இதன் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது.

ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதையடுத்து இப்படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் பல நண்பர்கள் ஒரு குடும்பம் போல நடித்துள்ளனர். இதை தனிப்பட்ட வெற்றியைப் போல் உணர்கிறேன். மேலும், படக்குழுவிற்கு தலை வணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com