தண்ணீரில் மிதக்கும் ஏனாம்

கோதாவரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஏனாம் தண்ணீரில் மிதக்கிறது.
தண்ணீரில் மிதக்கும் ஏனாம்
Published on

ஏனாம்

கோதாவரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஏனாம் தண்ணீரில் மிதக்கிறது.

கோதாவரியில் வெள்ளம்

ஆந்திரா, கர்நாடக, மராட்டிய மாநிலங்களில் தற்போது கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 15 லட்சம் கனஅடி வரை ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடுகிறது.

கோதாவரி ஆறு, புதுச்சேரி பிராந்தியத்தின் ஒரு பகுதியான ஏனாம் பகுதியில் தான் கடலில் கலக்கிறது. இதன் காரணமாக ஏனாமில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்குள் புகுந்தது

ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. ராஜீவ் பூங்கா, பாரதமாதா சிலை பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆற்றங்கரை அருகில் உள்ள சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

ஆங்காங்கே மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு கரையோரம் உடைப்புகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மண்டல நிர்வாக அதிகாரி முனுசாமி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

------

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com