ஸ்பெயின் நாட்டினர் தேங்காய் உடைத்து வழிபாடு

புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் ஸ்பெயின் நாட்டினர் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.
ஸ்பெயின் நாட்டினர் தேங்காய் உடைத்து வழிபாடு
Published on

புதுச்சேரி

ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவிலை பார்த்தனர். அப்போது மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் சிலர் தேங்காயை வீசி உடைத்ததை பார்த்து அதிசயித்தனர். எதற்காக இவ்வாறு செய்கிறார்கள்? என்று அருகில் இந்தவர்களிடம் கேட்டனர். அதற்கு, தங்களது வேண்டுதல் நிறைவேறினால் பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்வதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு வியந்த ஸ்பெயின் நாட்டவர்கள் அருகில் உள்ள கடையில் தேங்காய்களை வாங்கி உடைத்து வழிபட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com