கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கரூர்
கரூர்
Published on

நொய்யல்,

புன்னம் பகுதியில் உள்ள புன்னை வனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதேபோல் குந்தாணிபாளையம் நத்தமேட்டு ஈஸ்வரன் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி உடனுறை மாதேஸ்வரன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தோகைமலை அருகே ஆர்டி.மலை மீது உள்ள விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு மஞ்சள், விபூதி, குங்குமம், தேன், பன்னீர் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com