கரூர்
கரூர்

அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
Published on

நொய்யல்,

குந்தாணிபாளையம் நத்தமேட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரிஅம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர்அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதேபோல் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில், அத்திப்பாளையம் பொன்னாச்சி அம்மன் கோவில், சேமங்கி மாரியம்மன் கோவில், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், புன்னம் மாரியம்மன், பகவதியம்மன், பேரூர் அம்மன் கோவில், புன்னம் பசுபதிபாளையம் மாரியம்மன் கோவில், தவிட்டுப்பாளையம் மாரியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com