கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
Published on

மீன்சுருட்டி:

கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகன்நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவிலில் 7-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி கிரிவல திருவிழாவை முன்னிட்டு கணக்க விநாயகர் சிறப்பு அபிஷகம், ஆராதனை நடந்தது. இதையொட்டி மகா கணபதி ஹோமம் நடந்தது. மேலும் மஞ்சள், பால், தேன், விபூதி, சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் கணக்க விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு கிரிவல விழா தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராஜேந்திர சோழன் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com