பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
Published on

நொய்யல்

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே பாலமலையிலுள்ள பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியசுவாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com