ஸ்மார்ட்போன் தொடர்பான படிப்புகளும், வேலைவாய்ப்புகளும் என்னென்ன...?


ஸ்மார்ட்போன் தொடர்பான படிப்புகளும், வேலைவாய்ப்புகளும் என்னென்ன...?
x

மொபைல் போன் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

எல்லோர் கைகளையும் அலங்கரிக்கும் ஸ்மார்ட்போன் துறையிலும் நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. அதுதொடர்பான படிப்புகளை அறிந்து கொள்வோம்.... மொபைல் போன் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு அதிகரித்து வருவதால், இது தொடர்பான படிப்புகளுக்கு நல்ல வரவேற்புடன் கூடிய வேலைவாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் போன்ற படிப்புகள் இந்தத் துறையில் வேலைவாய்ப்பைப் பெற உதவும்.

* எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் (Electronics and Communication Engineering):

ஸ்மார்ட்போன்களின் வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்களை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல் இதில் அடங்கும்.

* கணினி அறிவியல் பொறியியல் (Computer Science Engineering):

மொபைல் செயலிகள், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இயங்குதள ஆப் டெவலப்மென்ட் மற்றும் ஸ்மார்ட்போன் மென்பொருள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இது உங்களை பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியமர்த்த வழிவகுக்கும்.

* தகவல் தொழில்நுட்பம் (Information Technology):

மொபைல் நெட்வொர்க்கிங், தரவு மேலாண்மை மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெறலாம். ஸ்மார்ட்போன் வடிவமைப்பு, நிர்வகித்தல் மற்றும் பராமரிப்பு சம்பந்தமான பணிகளுடன், ஐ.டி. நிறுவனங்களில் மற்ற பிற வேலைவாய்ப்புகளையும் உறுதி செய்கிறது.

* டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing):

ஸ்மார்ட்போன் செயலிகளை விளம்பரப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் இதில் அடங்கும். ஸ்மார்ட்போன் மட்டுமின்றி, லேப்டாப், கேட்ஜெட்ஸ் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான மார்க்கெட்டிங் யுக்திகளுக்கும், இந்த படிப்பானது பயன்படும்.

* மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட் (Mobile Application Development):

ஆப்ஸ் உருவாக்குதல் மற்றும் அதனை சந்தைப்படுத்துதலுடன், ஆப்ஸ் சம்பந்தமான மேம்படுத்துதல் பணி, மாற்றியமைத்தல் பணி, காலத்திற்கு ஏற்ப கூடுதல் வசதிகளை சேர்க்கக்கூடிய பணிகளை செய்ய இந்த படிப்பானது உதவும்.

சாம்சங், ஆப்பிள், ஷாவ்மி போன்ற பல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் புராஜெக்ட் மேனேஜர், டெவலப்பர், மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் போன்ற வேலைகள் கிடைக்கின்றன. கூடவே, மொபைல் செயலிகளை தயாரிக்கும் நிறுவனங்களில் டெவலப்பர், டெஸ்டர், புராஜெக்ட் மேனேஜர் போன்ற வேலை வாய்ப்புகள் உண்டு.

இவை மட்டுமின்றி, ஸ்மார்ட்போன்களுக்கு இணைய சேவை வழங்கும் ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்களில் நெட்வொர்க் என்ஜினீயர், டெலிகாம் டெக்னீஷியன் போன்ற வேலைகளில் சேர இந்த படிப்புகள் பெரிதும் உதவும்.

அதேசமயம், டிசைனிங் துறையில் கொட்டிக்கிடக்கும் எண்ணில் அடங்காத பிரிலான்ஸ் பணிகளை போல, ஸ்மார்ட்போன் துறையில் நிறைய பிரிலான்ஸ் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. அதன்மூலமாகவும், நீங்கள் பணிவாய்ப்புகளை பெறலாம்.

1 More update

Next Story