செங்கழுநீர் அம்மன் கோவிலுக்கு தனி அதிகாரி நியமனம்

புதுவை செங்கழுநீர் அம்மன் கோவிலுக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கழுநீர் அம்மன் கோவிலுக்கு தனி அதிகாரி நியமனம்
Published on

அரியாங்குப்பம் 

புதுச்சேரி மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலும் ஒன்று.. இந்த கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அறங்காவல் குழு அமைக்கப்பட்டு கோவில் திருப்பணிகள் மற்றும் விழாக்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாகி சுயேச்சை எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கின் எதிரொலியாக புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அறங்காவலர் குழுவிற்கு பதிலாக, தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலுக்கு தனி அதிகாரியாக அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் சுரேஷ் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ, தெற்கு பகுதி போலீஸ் சூப்பரண்டு வீரவல்லவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், அறங்காவல் குழுவினர் கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் தனி அதிகாரி நியமித்துள்ளதால் கிராம மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com