பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி யிடங்களுக்கு 361 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி
Published on

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பரோடா வங்கி. வெளிநாடுகளிலும் கிளை களைக் கொண்ட பிரபல வங்கியான இதில் தற்போது சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 361 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஸ்கேல்-2 தரத்திலான பணிகளுக்கு 40 இடங்களும், ஸ்கேல் 3 தரத்திலான பணிகளுக்கு 221 இடங்களும், ஸ்கேல் 4 தரத்திலான பணி களுக்கு 100 இடங்களும் உள்ளன.

பிரிவு வாரியான பணியிடங்கள், இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

இனி இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-4-2018-ந் தேதியில், குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியாகி, அதிகபட்சம் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., முதுநிலை பட்டப்படிப்புடன், டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

கட்டணம் :


பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.

தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 17-5-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.bankofbaroda.co.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com