கெலமங்கலம் அருகே எல்லம்மா தேவி கோவிலில் சிறப்பு பூஜை

கெலமங்கலம் அருகே எல்லம்மா தேவி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தத.
கெலமங்கலம் அருகே எல்லம்மா தேவி கோவிலில் சிறப்பு பூஜை
Published on

ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே கூட்டூர் கிராமத்திலுள்ள எல்லம்மா தேவி கோவில் முதலாம் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை நவசண்டி ஹோமம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com