முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
Published on

வாசுதேவநல்லூர்:

புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் உள்ள பெரிய பாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் கோவிலில் மாசி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம் திருநீறு, நறுமணப்பொருட்கள் உள்பட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com