சனி பிரதோஷத்தையொட்டி ஈஸ்வரன் கோவில்களில் சிறப்பு பூஜை

சனி பிரதோஷத்தையொட்டி ஈஸ்வரன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சனி பிரதோஷத்தையொட்டி ஈஸ்வரன் கோவில்களில் சிறப்பு பூஜை
Published on

மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தென்கரைக்கோட்டையில் உள்ள கல்யாண ராமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், நெய், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோன்று இருமத்தூர் சிந்தாமணி ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com