திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோரமூர்த்திக்கு சிறப்பு பூஜை

குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற வேண்டி அகோரமூர்த்திக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோரமூர்த்திக்கு சிறப்பு பூஜை
Published on

திருவெண்காட்டில் உள்ள சுவேதாரணேஸ்வரர் கோவிலில் சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோர மூர்த்தி சுவாமி தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இவரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கி பல்வேறு மேன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இக்கோவிலின் குடமுழுக்கு பெருவிழா அடுத்த மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது. இதனை ஒட்டி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற வேண்டி இன்று அகோரமூர்த்திக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதற்காக அகோர மூர்த்தி மூலவர் சன்னதி முன்பு பிரம்மாண்ட பூப்பந்தல் போடப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவருக்கு பல்வேறு மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com