

பனவடலிசத்திரம்
பனவடலிசத்திரம் பகுதிகளான மேலநீலிதநல்லூர் சிவஞானவெளியப்ப சாஸ்தா கோவில் , சின்னகோவிலாங்குளம் கொடுங்காலபோத்திஅய்யனார் கோவில், வன்னிக்கோனேந்தல் மருத உடையார் கோவில் ,தேவர்குளம் அய்யனார் கோவில் , மூவிருந்தாளி பெரிய ஆண்டவர் கோவில், மேலஇலந்தைகுளம் காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு யாக பூஜை, அபிஷேகம், அன்னதானம் நடந்தது.