சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதைப்போல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாக்குடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com