சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சனிப்பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

வெளிப்பாளையம்:

நாகை காயாரோகணசாமி கோவிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதைமுன்னிட்டு காயாரோகணசாமி மற்றும் நந்திகேஸ்வரருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, பச்சரிசி,இளநீர், தேன், பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து, நந்திக்கு வில்வ இலை மற்றும் அருகம்புல் மாலை சாற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் அமரநந்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கட்டியப்பர் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், அழகியநாதர் கோவில், வீரபத்திர சுவாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நாகநாதர் கோவில், சட்டையப்பர்கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com