அயோத்தி ராமர் கோவிலை பார்வையிட்ட இஸ்லாமிய மதத்தினர்

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது.
அயோத்தி ராமர் கோவிலை பார்வையிட்ட இஸ்லாமிய மதத்தினர்
Published on: 

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், திரைப்பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ராமர் கோவில் பிரதிஷ்டை நிறைவடைந்ததையடுத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 23ம் தேதி முதல் தினமும் ஆயிரக்கணக்கானோர் ராமர் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல், சுற்றுலா பயணிகளும், உள்ளூர், வெளியூர் மக்களும் ராமர் கோவிலை பார்வையிட அயோத்தி வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவிலை இன்று இஸ்லாமிய மதத்தினர் சிலர் பார்வையிட்டனர். கோவிலுக்கு சென்ற அவர்கள் கடவுள் ராமரை வழிபட்டு சென்றனர். அயோத்தி ராமர் கோவிலில் வழிபாடு நடத்த நீண்ட வரிசையில் காத்திருந்த இஸ்லாமிய மதத்தினரின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com