ராமர் கோவில் திறப்பு விழா: விராட் கோலிக்கு அழைப்பு

ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது
ராமர் கோவில் திறப்பு விழா: விராட் கோலிக்கு அழைப்பு
Published on

புதுடெல்லி, 

அயோத்தியில் கட்டப்பட்டுவரும் பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மாநில அரசு விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்து வருகிறது.

இந்த விழாவில் பங்கேற்க சர்வதேச அளவில் 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக உலக இந்து அறக்கட்டளையின் தலைவர் சுவாமி விக்யானானந்த் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளின் தூதர்கள், மந்திரிகள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.உள்நாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி , சச்சின் தெண்டுல்கருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com