உத்தர பிரதேசத்தில் 22-ம் தேதி பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

அயோத்தியில் வருகிற 22-ந் தேதி ராமர் கோவில் திறக்கப்பட்டு, குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
உத்தர பிரதேசத்தில் 22-ம் தேதி பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
Published on

லக்னோ,

அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது பாரம்பரிய நாகரா பாணியில் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில், பால பருவ ராமரின் சிலை வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட இருக்கிறது.

இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 25,000 இந்து மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக 10,000 பேர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், ராமர் கோயிலின் மூலவர் பிரதிஷ்டை செய்யப்படும் நாளான ஜனவரி 22 -ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது உத்தரப் பிரதேச மாநில அரசு.

மேலும், இதனை 'தேசிய விழா' என்று குறிப்பிட்டுள்ள அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஜனவரி 22-ம் தேதி மது விற்பனைக்கும் தடை விதித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com