பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறவுள்ள ஆட்டங்கள்

பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறவுள்ள ஆட்டங்கள்
Published on

தோகா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தத்தொடரில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சுவிட்சர்லாந்து - கேமரூன் அணிகள் மோதுகின்றன.

அதேபோல, மாலை 6.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் உருகுவே - தென் கொரிய அணிகள் மோதுகின்றன. இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - கானா அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com