பாரீஸ் ஒலிம்பிக்: 3-வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்

ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் ஒரே சீசனில் இரண்டு பதக்கங்களை வென்று தந்த முதல் வீராங்கனை என்ற சிறப்பை மனு பாக்கர் பெற்று உள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்: 3-வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்
Published on

பாரீஸ், 

 பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்திய வீராங்கனை மனு பாக்கர் இந்த போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தார்.

ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் தலா ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்று இருந்தார். தற்போது 25 மீட்டர் பிஸ்டல் பிரிவிலும் பதக்கம் வென்று சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நூலிழையில் பதக்க வாய்ப்பை தவற விட்டு நான்காவது இடத்தை பிடித்தார்.

அதேநேரம் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் ஒரே சீசனில் இரண்டு பதக்கங்களை வென்று தந்த முதல் வீராங்கனை என்ற சிறப்பை மனு பாக்கர் பெற்று உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com